இயக்குநர் ஷங்கரின் மகளா இது?… அதிதியின் அசத்தலான ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவரது மகள் அதிதியும் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக களமிறங்கவிருக்கிறார். அதிதிக்கு அமைந்திருக்கும் முதல் படமே டாப் ஹீரோக்களில் ஒருவரான கார்த்தியுடன் தான். அது தான் ‘விருமன்’ திரைப்படம்.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான முத்தையா இயக்கி வருகிறாராம். ஏற்கனவே, இயக்குநர் முத்தையா – கார்த்தி காம்போவில் ரிலீஸான ‘கொம்பன்’ சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ‘விருமன்’ படத்தை கார்த்தியின் அண்ணனும், முன்னணி ஹீரோவுமான சூர்யா தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து வருகிறார்.

இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சிலம்பரசனின் ‘கொரோனா குமார்’ படத்தில் அதிதி நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.