இயக்குநர் ஷங்கரின் மகளா இது?… அதிதியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவரது மகள் அதிதியும் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக களமிறங்கவிருக்கிறார். அதிதிக்கு அமைந்திருக்கும் முதல் படமே டாப் ஹீரோக்களில் ஒருவரான கார்த்தியுடன் தான். அது தான் ‘விருமன்’ திரைப்படம்.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான முத்தையா இயக்க உள்ளாராம். ஏற்கனவே, இயக்குநர் முத்தையா – கார்த்தி காம்போவில் ரிலீஸான ‘கொம்பன்’ சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ‘விருமன்’ படத்தை கார்த்தியின் அண்ணனும், முன்னணி ஹீரோவுமான சூர்யா தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்க உள்ளாராம்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இதன் ஷூட்டிங்கை வருகிற செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

Share.