16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… இயக்குநர் ஷங்கரின் மருமகன் மீது போக்சோ வழக்கு!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ஜென்டில் மேன்’. ‘ஜென்டில் மேன்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவருக்கு ‘காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0’ போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஷங்கர் இயக்கத்தில் கமலின் ‘இந்தியன் 2’, தெலுங்கில் ராம் சரண் படம், ஹிந்தியில் ரன்வீர் சிங் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் தாமோதரனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், புதுச்சேரியில் கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த 16 வயது சிறுமிக்கு பயிற்சியாளர் தாமரைக் கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை கொடுத்த தாமரைக் கண்ணன் மற்றும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், அவரது மகனும், கிரிக்கெட் அணியின் கேப்டனுமான ரோஹித் தாமோதரன், இன்னொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், செயலாளர் வெங்கட் ஆகியோரின் மீது புகார் கொடுத்துள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி. பின், ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.