சுதா கொங்கராவால் தலையில் அடித்துக்கொண்ட மணிரத்னம் !

தமிழ் சினிமாவிற்கு துரோகி என்ற படம் மூலம் அறிமுகமானவங்க தான் இயக்குனர் சுதா கொங்கரா . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றாலும் இவர் இரண்டாவதாக இயக்கிய இறுதிச்சுற்று மிக பெரிய வெற்றியை அடைந்தது . இதனை தொடர்ந்து இவர் இயக்கிய சூரரைப்போற்று திரைப்படமும் மெகா ஹிட் ஆனது . இந்த நிலையில் இவர் மீண்டும் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க போவதாக தகவல் வெளியாகின . இந்த தகவலை உறுதி செய்துள்ளார் சுதா.

மீண்டும் ஒரு உண்மையை கதையை வைத்து படம் இயக்க போவதாகவும் அதில் சூர்யா நடிக்க இருப்பதையும் பேட்டியில் கூறி உள்ளார் . இந்த நிலையியில் இயக்குனர் சுதா , ரஜினிகாந்த் பற்றியும் தெரிவித்துள்ளார்.இவர் இயக்குனர் ஆவதற்கு முன் இயக்குனர் மணிரத்னமிடம் துணை இயக்குனராய் பல வருடங்கள் பணி புரிந்துள்ளார். அப்பொழுது பாபா படத்திற்காக மணிரத்னம் வைத்து இருந்த இரண்டு டிக்கெட்காக மற்றொரு துணை இயக்குனரிடம் சண்டையிட்டு வாங்கினேன் என்று கூறி உள்ளார் . நான் சண்டை போட்டதை பார்த்த இயக்குனர் மணிரத்னம் தலையில் அடித்துக்கொண்டார் என்றும்கூறியிருக்கிறார்.

மேலும் ரஜினியை ஒரே ஒரு முறை மட்டும் தான் பார்த்து இருக்கிறேன் என்றும் கூறி உள்ளார் . ரஜினி சூரரைப்போற்று படத்தை பார்த்து விட்டு நன்றாக இருக்கிறதுஎன்று யாரிடமோ தெரிவித்துள்ளார் எனகூறினார் சுதா. மேலும். இந்த நிலைக்கு நான் வருவேன் என்றும் பெரிய நடிகர்களோட பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் நினைத்து பார்த்தது இல்லை என்று கூறியிருக்கிறார் .

Share.