ஆடியோ லான்ச்சில் பேசியது குறித்து இயக்குனர் சுசீந்திரன் விளக்கம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்த இவரின் புது லுக், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது மட்டுமில்லாமல், பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பழைய சிம்பு திரும்பி விட்டார் என்று இவரது ரசிகர்கள் சிம்புவின் புது லுக்கை இணையதளத்தில் வைரலாகி வருகிறார்கள். இந்நிலையில் அவ்வப்போது இந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து அப்டேட் வந்த வண்ணம் இருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து விட்டது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கோலாகலமாக ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவின் போது சுசீந்திரன் இந்த படத்தின் ஹீரோயின் நிதி அகர்வாலை சிம்புவை மாமா என்று அழைக்கும்படி கிண்டல் செய்தார்‌. இது தற்போது சர்ச்சைக்குள்ளானது, அதற்கு விளக்கமளித்து சுசீந்திரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Share.