சென்னை 28 கேங்கோட வாட்சப் குரூப் பெயர் என்ன தெரியுமா?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் மாநாடு . இந்த படம் சிம்புவின் திரைவாழ்க்கையில் இந்த படம் முக்கியமான படமாக அமைந்துள்ளது . மாநாடு படத்திற்கு பிறகு இவர் தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார் . அந்த படத்தில் நாகசைதன்யா நடித்து வருகிறார் .இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது .

மாநாடு படத்திற்கு பிறகு மன்மத லீலை என்கிற படத்தை இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு . அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தது . இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான முதல் படம் சென்னை 6000028 . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது . மிர்ச்சி சிவா , ஜெய் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து இருந்தனர் .

இதன் பிறகு 2016-ஆம் ஆண்டு சென்னை 6000028 படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது . இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது . இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஜெய் சென்னை 6000028 படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர்களுக்கு என தனி வாட்சப் குரூப் இருக்கிறது . அதற்கு பெயர் பாய்ஸ் ஆர் பேக் என்று தெரிவித்துள்ளார் மேலும் அந்த குரூப் இப்பொழுதும் ஆக்டிவாக இருக்கிறது என்று நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார் .

Share.