தொடங்கியுள்ள டாக்டர் திரைப்படத்தின் ஷூட்டிங்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனே தயாரித்துள்ளார். “கோலமாவு கோகிலா” படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் மட்டுமின்றி தற்போது சிவகார்த்திகேயன் “அயலான்” படத்திலும் நடித்து வருகிறார். டாக்டர் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் வினை வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மீதம் இரண்டு வாரங்கள் மட்டுமே டாக்டர் படத்தின் ஷூட்டிங் நடக்கும் என்றும் இதனால் அக்டோபர் மாதத்திற்குள் இந்த படத்தின் வேலைகள் முழுவதும் முடிந்தால் வருகிற தீபாவளியன்று சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கி உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளின் டப்பிங் வேலைகள் முடிந்து விட்டதாகவும் செய்தி வந்துள்ளது.

Share.