டான் படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டாக்டர் . இந்த படத்தை தொடர்ந்து டான் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார். S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . நடிகர் சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் இந்த படத்தில் சிறப்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

டான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த படத்தில் இருந்து ஜலபுல ஜங்கு மற்றும் ஒரு காதல் டுயூட் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிலையில் டான் படத்திலிருந்து மூன்றாவது பாடல் இந்த வாரம் வெளியாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. டான் படம் மே 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இந்த அப்டேட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் SK 20 படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் என்று சொல்லப்படுகிறது.

Share.