ஒரே நாளில் இரண்டு அப்டேட்

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட் . இந்த படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியானது . படம் வெளியான பின் கலவையான விமர்சனங்களை பெற்றது இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது .

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது .

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 67-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது . இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

விஜய்யின் பிறந்தநாள் அன்று தளபதி 66 படத்தின் முதல் பார்வையும் தளபதி 67 படத்தின் அறிவிப்பும் வரும் என்று கூறப்படுகிறது நடிகர் விஜய் பிறந்த நாளுக்கு டபுள் ட்ரீட் இருப்பதால் இரசிகர்கள் கொண்டாடத்தில் இருக்கின்றனர்.

Share.