சூப்பர் ஹிட்டான துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘சீதா ராமம்’ கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராஷ்மிகா மந்தனா, சுமந்த், தருண் பாஸ்கர், பூமிகா, வெண்ணிலா கிஷோர், முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார், பி.எஸ்.வினோத் – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளனர், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.