‘ஈஸ்வரன்’ படத்தின் இசை விருந்துக்கு நாள் குறித்த சிலம்பரசன்!

‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்துக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் TR நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சிலம்பரசன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார்.

‘ஈஸ்வரன்’ என்ற இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக நிதி அகர்வாலும், மிக முக்கிய ரோலில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நடித்துள்ளார்கள். சிலம்பரசனின் சினிமா கேரியரில் 46-வது படமான இதனை ‘மாதவ் மீடியா – D கம்பெனி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

தமன் இசையமைக்கும் இதற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் இறுதிக்கட்ட பணிகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. தற்போது, இந்த படத்தின் ஆடியோவை ஜனவரி 2-ஆம் தேதி ரிலீஸ் செய்ய பிளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share.