நடிகர் நாசருக்கு அமீரகம் அளித்த கவுரவம்

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராய் இருந்த இயக்குனர் K.பாலச்சந்தர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் நாசர் . கல்யாண அகதிகள் என்கிற படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இருந்தார் . அதன் பின் வேலைக்காரன் ,வண்ணக்கனவுகள் ,ரோஜா , தேவர்மகன், பம்பாய்,இருவர் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பதித்தவர்.

தர்பொழுது இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய ஆளுமை நடிகராக இருக்கிறார் . இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அமீரகம் சென்றுள்ள நடிகர் நாசருக்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது, இவ்விசா சினிமா துறை பிரபலங்கள் பலருக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தமிழ் திரையுலகில் வெகு சிலரே இதனை பெற்றுள்ளனர். நடிகர் நாசர் அவர்களுக்கு இவ்விசா கிடைக்க ஏற்பாடு செய்த துபை வாழ் இந்திய தொழில் அதிபர் திரு.வசிம் அதனுடன் நடிகர் நாசர் கோல்டன் விசா பெறும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

கோல்டன் விசா அளித்ததற்காக அமீரக அரசிற்கும் இதற்கு ஏற்பாடுகள் செய்த தொழில் அதிபர் வசிம் அதான் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

Share.