எந்திரன் 2.0 திரைப்படத்தின் வைரலாகும் vfx பிரேக் டவுன் வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எந்திரன் 2.0. பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் எந்திரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் சிக்குவலாக இந்த திரைப்படம் வெளியானது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்று மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

எந்திரன் படத்தை விட இந்த படத்தில் அட்வான்ஸ்ட் vfx பயன்படுத்தப்பட்டதாம். தற்போது இந்தப்படத்தின் vfx பிரேக் டவுன் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக வருகிறது.

தற்போது ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் நடிகை குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினி ஜனவரி மாதத்திலிருந்து கலந்து கொள்வார் என்று ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.

Share.