20 வருடம் கழித்து அஜித்துடன் இணைந்த நடிகர் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் . விரைவில் அவர் படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது . இந்நிலையில் நடிகர் அஜித்துடன் தீனா படத்தில் இணைந்து நடித்த மகாநதி ஷங்கர் மீண்டும் அஜித்தின் 61-வது படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . நடிகர் அஜித்தை முதல் முதலாக இவர் தான் தல என்று அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இதை நடிகர் அஜித் அங்கு உள்ளவர்களிடம் சொல்லி மகாநதி ஷங்கரை அறிமுகப்படுத்தி இருக்கிறார் .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . வருகின்ற தீபாவளிக்கு இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தயாரிப்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

Share.