இரவின் நிழல் படத்தின் முதல் பாடல் அறிவிப்பு !

1989வது ஆண்டு வெளியான புதிய பாதை என்கிற படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன் . இவருக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் சிறந்த நடிகர் மற்றும் இயக்குனர் என்ற பெயருடன் கோலிவுட்டில் வளம் வருகிறார் . இவர் தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகளை செய்து வருகிறார் . அந்த வகையில் தற்பொழுது இவர் இயக்கி இருக்கும் படம் இரவின் நிழல் . இந்த படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது . மேலும் எடிட்டர் இல்லாமலே இந்த தயாராகி உள்ளது . இயக்குனர் A.R.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் .

இந்நிலையில் இரவின் நிழல் படத்தின் முதல் பாடல் பற்றின அறிவிப்பு வெளியாகி இருக்கிறது . மே 01-ஆம் தேதி 6 மணியளவில் இந்த பாட்டு வெளியாகும் என்று அறிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன் . ஏற்கனவே இந்த படத்தை பார்த்த A.R.ரகுமான் மிகவும் பாராட்டி இருந்தார் .அதன் பிறகு அனுராக் காஷ்யப் இந்த படத்தை பார்த்து மிகவும் புகழ்ந்து பேசி இருந்தார் . ஏற்கனவே படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது . எனவே இந்த படத்தின் முதல் பாடல் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

Share.