வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாடல் அறிவிப்பு

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாநாடு. நீண்ட வருடம் கழித்து இந்த படம் சிம்புவிற்கு வெற்றியை தந்த படமாக திகழ்கின்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவிற்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.அந்த வகையில் சிம்பு தற்பொழுது
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் .

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக இந்த படம் உருவாகி உள்ளது .தாமரை பாடல்கள் எழுதுகிறார்.

இந்த நிலையில், ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் பாடல் வரும் மே 6 ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. கௌதம் மேனன், சிம்பு, ரஹ்மான் கூட்டணி என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Share.