மாலத்தீவில் தனது மனைவி நஸ்ரியாவுடன் சைக்கிளிங் சென்ற ஃபஹத் ஃபாசில்… வைரலாகும் வீடியோ!

மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஃபஹத் ஃபாசில். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஃபஹத் ஃபாசில் தமிழ் மொழியில் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்..

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான தமிழ் படம் ‘விக்ரம்’. இதில் ஹீரோவாக ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்க, இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில் ‘அமர்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்போது உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ படத்தில் மிக முக்கிய ரோலில் ஃபஹத் ஃபாசில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஃபஹத் ஃபாசிலின் மனைவியும், பிரபல நடிகையுமான நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மாலத்தீவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் ஃபஹத் ஃபாசிலும், நஸ்ரியாவும் ஜாலியாக சைக்கிள் ஓட்டிச் செல்கின்றனர்.

Share.