“அந்த இயக்குநரா? தேவையில்லாம நீங்க போய் மாட்டிக்கிட்டீங்களே?”… புலம்பி தவிக்கும் டாப் ஹீரோவின் ரசிகர்கள்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் தான் அந்த நடிகர். இப்போது அந்த நடிகரின் நடிப்பில் ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஒரு சயின்ஸ்-ஃபிக்ஷன் படத்துக்கான ஷூட்டிங்கே சமீபத்தில் தான் முடிந்தது.

இன்னொரு படம் முடிந்து ரிலீஸ் தேதியெல்லாம் அறிவித்தார்கள். முதலில் தேர்தலால் தள்ளிப்போனது. அடுத்து கொரோனா இரண்டாம் அலையால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. நான்காவது படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஐந்தாவது படத்தை தெலுங்கில் ஒரு சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய இயக்குநர் தான் இயக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளதாம்.

இந்த படத்தில் நடிக்க அந்த ஹீரோவுக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அந்த நடிகர் அவரது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறாராம். இந்த படத்தை ஸ்டைலிஷ் இயக்குநர் தான் இயக்க உள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்ட அந்த நடிகரின் ரசிகர்கள் “அந்த இயக்குநரா?… ஏற்கனவே அவர் இயக்கிய 2 படங்கள் எப்போது ரிலீஸ்? என்றே தெரியாமல் இருக்கிறது. இதில் நம்ம ஆள் இவரிடம் சிக்கிக்கொண்டாரே” என்று புலம்பி வருகிறார்களாம்.

Share.