நடிகர் கமலுக்கு கோவில் கட்டும் ரசிகர்கள் !

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்,சூர்யா , விஜய் சேதுபதி ,ஃ பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது . உலகம் முழுக்க இந்த படம் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது . பல இடங்களில் இந்த படம் புதிய சாதனை செய்து வருகிறது. சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

தமிழ் திரை உலகில் பிரமாண்டமான வெற்றியை விக்ரம் படம் பெற்று உள்ளது . இந்த நிலையில் கொல்கத்தாவில் கிதிர்பூர் நகரில் இருக்கும் ரசிகர்கள் கமல்ஹாசனுக்கு கோவில் ஒன்றை கட்டி வருகிறார்கள். விக்ரம் வெளியாவதற்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்தக் கோவில் விக்ரம் வெற்றி பெற்றதும் கட்டுமானப்பணியைத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது . இந்தக் கோவிலை திறந்து வைக்க கமல்ஹாசனுக்கு கடிதம் மூலம் அழைப்பும் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் கடவுள் மறுப்புக் கொள்கையை கொண்டவர் . எனவே ரசிகர்களின் இந்த அன்பு கோயிலை திறந்து வைக்க நடிகர் கமல் செல்வாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது . கமல் நிச்சயம் இந்த கோவிலுக்கு வருவார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள் .

Share.