சிங்கம் படத்தின் 12வது ஆண்டு விழா !

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான படம் தான் சிங்கம் . இந்த படத்தை இயக்கி இருந்தவர் இயக்குனர் ஹரி . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியீட்டது. இந்த படத்தில் அனுஷ்கா நாயகியாக நடித்து இருந்தார் . தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படத்திலிருந்த அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது . 15 கோடி தயாரிப்பில் உருவான இந்த படம் 90 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை புரிந்தது.

சிங்கம் படத்திற்கு முன்பு ஹரி – சூர்யா கூட்டணியில் ஆறு மற்றும் வேல் படங்கள் வெளியாகி இருந்தது . இந்த இரண்டு படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதனால் சிங்கம் பாகம் ஒன்றின் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது . படம் வெளியாகி இந்த படம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தது . இதனால் சிங்கம் படத்தின் ரெண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் உருவாக சிங்கம் பாகம் ஒன்றின் வெற்றி முக்கியமான காரணம் .

மிகுந்த விறுவிறுப்பான சண்டை காட்சிகள் , பஞ்ச் வசனங்கள் , செண்டிமெண்ட் , காமெடி காட்சிகள் என ஒரு மசாலா படத்திற்கு தேவையான அனைத்தும் இந்த படத்தில் இருந்தது .இதனால் இந்த படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது . இந்த படம் 12 வருடம் ஆகிறது இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர் .

Share.