அரபிக் குத்து பாடலை கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள படம் பீஸ்ட் . இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . ஏற்கனவே விஜய் மற்றும் அனிருத் கூட்டணியில் கத்தி மற்றும் மாஸ்டர் படங்கள் வெளியாகி இருந்தன . இந்த இரண்டு படத்திலுமே பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றி கூட்டணி பீஸ்ட் படத்திற்கு இணைந்தது . இந்த படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருக்கிறார் . இந்த பாடலுக்கு மிக பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.இதுவரையில் இந்த பாடலை 295 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் . இந்த படத்தின் வீடியோவை காண மிகுந்த ஆர்வத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையில் பீஸ்ட் படம் இன்று வெளியாகி இருக்கிறது . இன்று அரபிக் குத்து வீடியோவை முழுவதும் பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜய்யின் நடனம் மற்றும் அவரது ஸ்டைல்
ஆகியவற்றை ரசிகர்கள் திரையில் மிகவும் ரசித்து வருகின்றனர் . படத்தை காட்டிலும் இந்த பாடலை வெகுவாக கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

Share.