நயன்தாராவின் திருமணம் தொடர்பாக ரசிகர் கேட்ட கேள்வி… விக்னேஷ் சிவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘பாட்டு’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சமீபத்தில், இவர்களின் திருமணம் தொடர்பாக விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி ஒன்றில் “எங்களுக்கு சில ப்ளான்ஸ் இருக்கு. அதை எல்லாம் முதல்ல முடிக்கணும். இப்போதைக்கு நாங்க எங்க வேலையில தான் அதிக கவனம் செலுத்துறோம்.

An's Question About Vignesh Shivan Nayanthara Marriage1

எப்போ நாங்க பண்ணிட்டு இருக்குற லவ் போர் அடிக்குதோ, அப்போ தான் திருமணம் செய்து கொள்வோம். அந்த டைம் நாங்களே அதிகாரப்பூர்வமா அறிவிப்போம்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் “நீங்கள் ஏன் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவில்லை?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு விக்னேஷ் சிவன் “திருமணம் மற்றும் மற்ற அனைத்து விஷயங்களுக்கும் ரொம்ப செலவாகும் பிரதர். அதனால், திருமணத்துக்காக பணத்தை சேமித்து வருகிறேன். மேலும், கொரோனா பிரச்சனையும் முடிவதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share.