ரௌடி பேபியை பாராட்டிய பிரபல ஹீரோயின்… ஷாக் மோடுக்கு ஆக்டிவேட்டான ரசிகர்கள்!

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நடிகை. விரல் வித்தை நடிகரின் ரொமான்டிக் படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமான இந்த நடிகை, அடுத்தடுத்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின்களின் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார்.

இந்த நடிகைக்கு தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. டாப் ஹீரோயினாக வலம் வரும்போதே பிரபல தெலுங்கு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது இவரது கணவர் நடித்திருக்கும் புதிய லவ் படத்தில் ரௌடி பேபி தான் ஹீரோயின்.

இந்த படம் ஆரம்பித்தபோது, தன் கணவரை விட ரௌடி பேபிக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்று இயக்குநரிடம் கொந்தளித்தார் அந்த நடிகை. ஆனால், சமீபத்தில் அப்படத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட்டு ரௌடி பேபியை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார் நடிகை. நடிகையின் இந்த திடீர் மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Share.