பண மோசடி செய்தாரா விமல் ?

பசங்க , களவாணி , வாகை சூட வா , போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் விமல் . கடந்த சில வருடமாக இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரிஸ் ரசிகர்ளிடயே நல்ல வரவேற்பை பெற்றது . பலரும் இவரது நடிப்பை பாராட்டினார்கள் .

இந்நிலையில் பெங்களூர் நகரை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் கோபி என்ற நபர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.அந்த திருப்பி புகாரில் ’மன்னார் வகையறா’ என்கிற படத்தை விமல் எடுத்த போது தன்னிடம் 5 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும் அந்த படத்தின் லாபத்தில் தனுக்கு பங்கு தருவதாக தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாங்கிய கடனையும் திருப்பி தரவில்லை , படத்திலிருந்து வந்த லாபத்தையும் தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் . விமல் தற்பொழுது பத்துக்கும் அதிகமான படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார் .
ஆனால் தனக்கு தரவேண்டிய ஐந்து கோடி ரூபாயை திருப்பி தராமல் இருப்பதோடு பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், எனவே விமல் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து தனக்கு வரவேண்டிய 5 கோடி ரூபாயை வசூலித்து தரும்படியும் அந்த புகாரில் தயாரிப்பாளர் கோபி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விமல் இதுபற்றி எதுவும் வெளிப்படையாக பேசவில்லை .

Share.