வெங்கட் பிரபுவுக்கு கிடைத்த பரிசு !

தமிழ் நடிகர்கள் தெலுங்கு படம் நடிப்பது போல்,தமிழ் படங்களை மட்டும் இயக்கி கொண்டு
இருந்த வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார் .

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா, தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, ஸ்ரீநிவாஸா
சில்வர் ஸ்கிரீன்ஸ் சார்பில் தயாரிக்கும், புதிய இருமொழி திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ் சினிமாவின் புதிய அலை சினிமாவுக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணங்களில்
வெங்கட் பிரவும் ஒருவர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவருடைய ஒவ்வொரு படத்திலும்,
அவர் மேற்கொண்ட சோதனை முயற்சிகள், புதிதாக வரும் இயக்குனர்களுக்கு பெரும்
நம்பிக்கையாக விளங்குகிறது. மங்காத்தா என்ற பெரும் பிளாக்பஸ்டர் படத்திற்கு பிறகு,
தற்போது மாநாடு என்ற பெரும் வெற்றியுடன் வந்துள்ளார். மாநாடு திரைப்படதின் வெற்றியை
ரசிகர்கள் கொண்டாடும் வேளையில், மன்மதலீலை என்ற படத்தோடு துரிதமாக வந்தார். குறுகிய
காலகட்டத்தில் உருவான இந்த படம், அவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர்
படமாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்குனராக அவதாரம் எடுத்து 15 வது ஆண்டில் அடியெடுத்து
வைக்கும் இந்த வேளையில், நாகசைதன்யா உடன் அவர் இணையும் இருமொழி படத்தின்
அறிவிப்போடு அவர் வந்திருக்கிறார்.

பெயரிடப்படாத இந்த புதிய படம் நாகசைதன்யாவிற்கு முதல் தமிழ் படம் ஆகும், இயக்குநர்
வெங்கட் பிரபு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம், இப்படம் பெரிய பட்ஜெட்டில் , சிறந்த
தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

Share.