“ப்ளீஸ் ரெண்டு பேரும் சண்டை போடுங்க”… ஆரியிடம் சொன்ன ரம்யா பாண்டியன்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா மற்றும் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் பாலாஜி முருகதாஸ் சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அப்போது ‘பிக் பாஸ்’ குரலில் “பாலாஜி freeze” என்று ஒலிக்கிறது. உடனே, பாலாஜி சிலை போல் அமர்ந்திருக்கிறார். அவர் அருகில் வந்த ஆரி “சூடா பொங்கல் சாப்பிடு ராஜா சாப்பிடு” என்று சொல்லி அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்கிறார். அப்போது ‘பிக் பாஸ்’ குரலில் “ஆரி rewind” என்று ஒலிக்கிறது.

உடனே, ஆரி மீண்டும் பாலாஜி அருகில் வந்து “சாப்பிடு ராஜா சாப்பிடு” என்று சொல்லிக் கொண்டிருக்கையில் ‘பிக் பாஸ்’ குரலில் “ஆரி freeze” என்று ஒலிக்கிறது. பின், ஆரி சிலை போல் பாலாஜியின் கன்னத்தை பிடித்தபடி நிற்கிறார். இவர்கள் இருவரையும் பார்த்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் சிரித்தபடி “ரெண்டு சண்டக்கோழிங்க கொஞ்சிகிட்டு இருக்காங்க. ஆரி உங்களுக்கு பாலாஜியை கொஞ்சுறது பிடிக்குமா என்ன? தம்பி அப்படின்னு கொஞ்சுறீங்களா? எனக்கு இது பார்க்க பிடிக்கல ப்ளீஸ் சண்டை போடுங்க” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.