வைரலாகும் ஜி.வி.பிரகாஷ் புகைப்படம்

கடந்த 2006ஆம் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் வெயில் . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தவர் ஜி.வி.பிரகாஷ் . இது தான் இவரது முதல் படம் . இந்த பல வெற்றி படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார் . பல நல்ல நல்ல பாடல்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார் . 2014ஆம் ஆண்டு வரை இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் 2015ஆம் ஆண்டு வெளிவந்த டார்லிங் என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் .

தற்போது தனக்கென ஒரு இடத்தை தமிழ்சினிமாவில் இவர் பிடித்துள்ளார்‌.
சமிபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஐங்கரன் , செல்ஃபி, உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.

படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் இவர் தொடர்ந்து இசையமைத்து வருகிறார் . பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவரின் இசை தூணாக இருந்து இருக்கிறது.
அந்த வகையில் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் யானை .இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.

இது தவிர்த்து ஜி.வி.பிரகாஷ் சமூகவலைதளங்களிலும் இவர் தொடர்ந்து ஆர்வமாக செயல்படக்கூடியவர் . அந்த வகையில் இவர் நேற்று போட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. வேஷ்டி சட்டையில் ஜி.வி.பிரகாஷ் க்ளாஸான லுக்கில் இருக்கிறார்.

Share.