திருமண ஆசை காட்டி பண மோசடி செய்த ஆர்யா மீது ஜெர்மனி பெண் புகார்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இப்போது, ஆர்யா நடிப்பில் ‘எனிமி, டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘டெடி’ படத்தை இந்த ஆண்டு (2021) மார்ச் மாதம் 12-ஆம் தேதி ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற பிரபல OTT தளத்தில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ஆர்யாவின் மனைவி சாயிஷாவே நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரெய்லரும், ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி ஆர்யாவின் ரசிகர்களை ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் செய்தது.

இந்நிலையில், ஆர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி, அவரது மனைவியும், நடிகையுமான சாயிஷாவையே ஷாக் மோடுக்கு ஆக்டிவேட்டாக்கியிருக்கிறது ஒரு பரபரப்பு செய்தி. ஜெர்மனில் வாழ்ந்து வரும் தமிழ் பெண் விட்ஜா, கடந்த ஆண்டு (2020) லாக் டவுன் டைமில் ஆர்யா தான் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், தன்னை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் என்னிடம் ஆசை வார்த்தை கூறியதுடன் ரூ.70 லட்சத்து 40 ஆயிரம் பணத்தையும் வாங்கினார்.

இப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்வதோடு, என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் என்று கூறி பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் ஆர்யா மீது புகார் கொடுத்துள்ளாராம் விட்ஜா.

இப்புகாருடன் ஆர்யாவுக்கு பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள் மற்றும் பணத்தை திருப்பி கேட்டபோது ஆர்யாவின் தாயார் விட்ஜாவை திட்டிய ஆடியோ பதிவுகளும் இணைக்கப்பட்டிருக்கிறதாம். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உள்துறை அமைச்சகம். இப்புகார் குறித்து தெரிந்து கொண்ட ஆர்யா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விட்ஜாவிடம் கூறினாராம். ஆனால், விட்ஜா இப்புகாரை வாபஸ் வாங்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.

Share.