“நான் காதலித்து தான் திருமணம் செய்வேன்”… அடம்பிடிக்கும் 38 வயது நடிகை!

தமிழ் திரையுலகில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அந்த சின்ன நம்பர் நடிகை. ஆரம்பத்தில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த இவர் அடுத்தடுத்து கொடுத்த சில ஃப்ளாப் படங்களால் இவருக்கு பின்னால் வந்த பல நடிகைகள் அந்த இடத்துக்கு சென்று விட்டார்கள்.

கடைசியாக அந்த நடிகை நடித்த ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர் படம், பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸானது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் தட்டினார்கள்.

இப்போது நம்பர் நடிகையின் நடிப்பில் தமிழ் மொழியில் நான்கு படங்களும், மலையாள மொழியில் ஒரு படமும், கன்னட மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது. ஆனால், இந்த ஆறு படங்களில் எல்லாமே ஹிட்டாகி விடுமா? என்பது படங்கள் ரிலீஸானால் தான் தெரியும். இந்நிலையில், 38 வயதான இந்த நடிகையிடம் “திருமணம் செய்து கொள்” என்று குடும்பத்தினர் சொல்கின்றனராம். ஆனால், நடிகையோ “நான் காதலித்து தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று அடம்பிடிக்கிறாராம்.

Share.