பிச்சை எடுக்கும் பெண்ணிற்காக களமிறங்கும் சந்தானம் !

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தார் . தமிழ் கதாநாயகர்களின் அனைத்து படங்களிலும் இவர் நடித்தார். இவர் இருந்தாலே படம் நிச்சயம் நன்றாக இருக்கும் , நகைச்சுவையாக இருக்கும் என்று ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்றார்கள் .

இந்நிலையில் நடிகர் சந்தானம் இனிமேல் நகைச்சுவை கதாநாயகனாக நடிக்க போவதில்லை என்று அறிவித்தார் . இதனை தொடர்ந்து தமிழில் நிறைய நகைச்சுவை படங்கள் வருவது குறைந்தது .தமிழ் சினிமா ரசிகர்கள் இன்றும் இவரின் காமெடி காட்சிகளை ரசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் .

இந்நிலையில் நடிகர் சந்தானம் ரத்தன குமார் இயக்கத்தில் குலு குலு என்கிற படத்தில் நடித்து முடித்து உள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்து இருந்தது.இந்த படத்தில் இருந்து வெளியான மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து தற்போது ஸ்னீக் பீக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Share.