குலு குலு படத்தின் டீசர் எப்படி இருக்கு ?

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தார் . தமிழ் கதாநாயகர்களின் அனைத்து படங்களிலும் இவர் நடித்தார். இவர் இருந்தாலே படம் நிச்சயம் நன்றாக இருக்கும் , நகைச்சுவையாக இருக்கும் என்று ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்றார்கள் .

இந்நிலையில் நடிகர் சந்தானம் இனிமேல் நகைச்சுவை கதாநாயகனாக நடிக்க போவதில்லை என்று அறிவித்தார் . இதனை தொடர்ந்து தமிழில் நிறைய நகைச்சுவை படங்கள் வருவது குறைந்தது .தமிழ் சினிமா ரசிகர்கள் இன்றும் இவரின் காமெடி காட்சிகளை ரசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் .

இந்நிலையில் நடிகர் சந்தானம் ரத்தன குமார் இயக்கத்தில் குலு குலு என்கிற படத்தில் நடித்து முடித்து உள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்து இருந்தது.இந்த படத்தில் இருந்து வெளியான மோஷன் போஸ்டரும் ரசிக்கும்படியாக இருந்தது . இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

Share.