ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘பேச்சுலர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது.

இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பேச்சுலர்’ எனும் படத்தை சதீஷ் செல்வக்குமார் இயக்க, ஹீரோயினாக திவ்யபாரதி நடித்துள்ளார். இந்த படம் இன்று (டிசம்பர் 3-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் முனிஷ்காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.