தன் மகள் குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஜிவி.பிரகாஷ்!

தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ்குமார், 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான “வெயில்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

பின்பு பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, தலைவா, ராஜா ராணி, தெறி, அசுரன் போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், பின்பு நடிகராகவும் உருவெடுத்தார்.

இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “டார்லிங்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது ஐயங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே படங்களில் நடித்துள்ள இவர், ஜெயில், 4ஜி, காதலைத் தேடி நித்யானந்தா, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் போன்ற படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் இசையமைப்பில் “சூரரைப்போற்று” திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

இவர் 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதுவரை தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாத இந்த ஜோடி, தற்போது அவர்களின் குழந்தையை அழகாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது இணையதளத்தில் இந்த க்யூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த போட்டோ ஷூட் பற்றி பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் ஜிவி பிரகாஷ் குமார். இவர் கூறியுள்ளதாவது ” என் மகள் அன்வி அப்படியே அம்மாவை போல. குழந்தை பிறந்து ஒரு மாதத்திலேயே போட்டோஷூட் பண்ணனும்னு ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனால் லாக்டவுன் காரணமாக பண்ண முடியவில்லை. இப்போ போட்டோஷூட் பண்ணனும்னு முடிவு பண்ண உடனே அன்வி தூங்கிட்டாங்க. அதனால ஈஸியா பண்ணிட்டோம். அன்வி பிறந்து நாலு மாசம் ஆச்சு. தேவையில்லாத விஷயங்களுக்கு அழவே மாட்டாங்க. அவங்களோட சேர்ந்து விளையாடும் பொழுதுகள் மறக்கமுடியாதவை. அன்விய தைரியமான பெண்ணா வளர்க்கணும். அப்பாவா பொறுப்பா என்னோட கடமைகளை செய்ய வேண்டும். ஆனால் அவங்களோட முடிவு அவங்களே எடுத்துக்கிற தனித்துவத்தோடு வளர்க்கணும்” என்று தன் குழந்தை வளர்ப்பு மற்றும் அனுபவம் குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Share.