ரகசியத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்- பிரியா பவானி சங்கர் பதில்!

2010 ஆம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். தற்போது இவர் பிரபல இயக்குனரான சசி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹரீஷ் கல்யாண் 2018 ஆம் ஆண்டு இலன் இயக்கத்தில் வெளியான “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமும் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

இவர் தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரிப்ளை செய்துள்ள பிரியா பவானி சங்கர், லாக்டோன் முடியும் வரை காத்திருக்க முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதற்கு ஹரிஷ் கல்யாண் நாளை மாலை 5 மணிக்கு ஆபீஷியல் அந்நௌன்ஸ்மெண்ட் வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார். தற்போது ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் “பெல்லி சூபுலு” என்ற சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை கார்த்திக் சுந்தர் என்பவர் இயக்கி வருகிறார். நாளை இந்த படம் குறித்து முக்கியமான அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.