ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஜோடியின் திரைப்படம்!

2010 ஆம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். தற்போது இவர் பிரபல இயக்குனரான சசி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹரீஷ் கல்யாண் 2018 ஆம் ஆண்டு இலன் இயக்கத்தில் வெளியான “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமும் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

இவர் நடிகை பிரியா பவானி சங்கருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருப்பதாகவும் இது குறித்த செய்தியை விரைவில் வெளியிடுவேன் என்றும் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள ஹரிஷ் கல்யாண் தாங்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கும் ஒரு திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் தேவரகொண்டா அக்டோபர் ஒன்றாம் தேதி மாலை 5.40க்கு வெளியிடுவார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Share.