தியேட்டருக்கு நோ… OTT ரிலீஸுக்கு நாள் குறித்த ‘ஓ மணப்பெண்ணே’ டீம்!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தெலுங்கு திரையுலகில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பெல்லி சூப்புலு’. இந்த படத்தை இயக்குநர் தருண் பாஸ்கர் இயக்கியிருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா, ப்ரியதர்ஷி, நந்து, அனீஸ் குருவில்லா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் மெகா ஹிட்டானது. இப்படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘ஓ மணப்பெண்ணே’.

இதில் ஹீரோ – ஹீரோயினாக ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளனர். மேலும், முக்கிய ரோல்களில் அன்புதாசன், அபிஷேக் குமார், அஷ்வின் குமார், வேணு அரவிந்த், KSG வெங்கடேஷ், அனீஸ் குருவில்லா, சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்க, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுத பூஜை ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.