இன்று பிறந்தநாளை கொண்டாடும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் – HBD !

மணிரத்தினம் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளிவந்த “காற்றுவெளியிடை” படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இவர் 2017 ஆம் ஆண்டு ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவான “இவன் தந்திரன்” படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் வலம்வர ஆரம்பித்தார். பின்பு விக்ரம் வேதா, ரிச்சி, நேர்கொண்டபார்வை ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர் தற்போது திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் “மாறா” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி “சக்கரா” படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படங்கள் லாக்டோன் முடிந்ததும் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இன்று ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். இவருக்கு இணையதளத்தில் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

Share.