ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம் : “விஜய் ரியல் ஹீரோ தான்”… தனி நீதிபதி கூறிய கருத்துகளை நீக்கிய உயர்நீதிமன்றம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸானது.

விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார். இதன் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் இருந்து 2012-ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த விஜய், அதற்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த ஆண்டு (2021) ஜூலை 13-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

மேலும்,”விஜய் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும், இதுபோன்று ரீல் ஹீரோவாக இருக்க கூடாது” என்று நீதிபதி கூறியிருந்தார். பின், விஜய் தனி நீதிபதி தன்மீது கூறிய எதிர்மறை கருத்துகளை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தற்போது, இவ்வழக்கை இன்று (ஜனவரி 25-ஆம் தேதி) விசாரித்த நீதிபதிகள் விஜய் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறிய எதிர்மறை கருத்துகள் நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

Share.