பாக்யராஜை சங்கடப்படுத்திய இயக்குனர் ! என்ன காரணம் தெரியுமா ?

இந்திய சினிமாவில் தந்து தனித்துவமான திரைக்கதை மூலம் முத்திரை படித்தவர் இயக்குனர் பாக்கியராஜ் .
இவர் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் . இந்நிலையில் 21 வருடங்களுக்கு பிறகு நடிகர் பாக்கியராஜ் ‘3.6.9’. என்கிற படம் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை பி ஜி எஸ் சரவணகுமார் தயாரித்துள்ளார் . சிவ மாதவ் என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார் .

உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது . மேலும் 24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75க்கும் மேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது .சமீபத்தில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது .

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ் 21வருடம் பிறகு நான் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறேன் என்று போட்டு என்னையே சங்கடப்படுத்தி விட்டார்கள். படத்தில் திரைக்கு முன் வருகிறவர்கள் தான் ஹீரோவா கதை மற்றும் திரைக்கதை எல்லாம் சும்மாதானா
என்று கேள்வி எழுப்பினார். மேலும் தான் இதுவரை கிறிஸ்துவனாக நடித்தது இல்லை இதுவே முதல் முறை என்றார் . மேலும் இந்த படம் சயின்ஸ் பிக்சன் படம் என்றார்கள் .இவர்கள் திட்டமிட்டது எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. 81 நிமிடம் தான் எடுப்பார்கள் என்பதால் 3 நாள் ரிகர்சல் செய்தார்கள். யாராவது சொதாப்பினால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது. ஆனால் இவர்கள் 1 மாதம் ரிகர்சல் செய்து வந்திருந்தார்கள். மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்து உள்ளார்கள் என்று கூறினார் பாக்கியராஜ் .

Share.