அந்த நம்பர் நடிகையுடன் தான் டூயட் பாடுவேன்… அடம்பிடிக்கும் டாப் ஹீரோ!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நடிகர். இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் தான் இந்த நடிகர் பிரபல டிவி சேனலில் தொகுத்து வழங்கிய ஒரு ரியாலிட்டி ஷோவின் ஷூட்டிங் முற்றிலும் நிறைவு பெற்றது. அதன் பிறகு அரசியலில் பிஸியாகி விட்டார் நடிகர்.

இப்போது அந்த நடிகரின் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநரின் பார்ட் 2 படமும், இளம் இயக்குநரின் படமும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பிரம்மாண்ட இயக்குநரின் படம் பல சிக்கலில் சிக்கி அடுத்து எப்போது தொடங்கும் என்றே தெரியாமல் பாதியில் நிற்கிறது. இளம் இயக்குநரின் படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், இப்படத்தில் வில்லனாக பிரபல நடன இயக்குநர் ஒப்பந்தமானார். தற்போது, இதில் ஹீரோ தனக்கு ஜோடியாக இதுவரை தன் படங்களில் நடிக்காத பெரிய நம்பர் நடிகை தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநரிடம் சொல்லி விட்டாராம். ஆனால், நம்பர் நடிகையின் கைவசமோ அடுத்தடுத்து ஐந்து படங்கள் இருப்பதால், அவர் ஓகே சொல்வது டவுட்டு தான் என்று இயக்குநர் சொன்னாலும், அந்த நடிகை தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம் ஹீரோ.

Share.