90-களில் ரஜினி – கமலுக்கு முன்பே கோடியில் சம்பளம் வாங்கிய ஹீரோ யார் தெரியுமா?

சினிமாவில் ஒரு படம் ஹிட்டானாலே ஹீரோக்கள் கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள். அதுவும் அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை இன்னும் அதிகமாக்கிக் கொண்டே போகிறார்கள். இப்போது ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கமல், சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி என கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் ஏராளம்.

90-களில் ரஜினி, கமல் டாப்பில் இருந்தபோது கோடிகளில் சம்பளம் வாங்கி வந்தனர். ஆனால், இவர்களுக்கு முன்பே ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய ஒரு ஹீரோ இருந்தார். அவர் தான் நடிகர் ராஜ்கிரண். இவருக்கு தமிழில் ஹீரோவாக அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘என் ராசாவின் மனசிலே’.

பின், ‘அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான்’ ஆகிய படங்களில் நடித்த ராஜ்கிரணுக்கு, அதுவும் ஹிட் படங்களாக அமைந்தது. அதன் பிறகு ‘மாணிக்கம்’ என்ற படத்தில் நடிக்க 1996-ஆம் ஆண்டு ஒப்பந்தமானார். அப்படத்தில் நடிக்க ராஜ்கிரணுக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாம். இந்த படத்தை ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்க, இயக்குநர் கே.வி.பாண்டியன் இதனை இயக்கியிருந்தார்.

Share.