தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் 8 இயக்குநர்கள்!

ஒரு படத்தின் வெற்றியில் மிகப் பெரிய பங்கு அப்படத்தின் இயக்குநருக்கு உண்டு. கதை – திரைக்கதை – வசனம் எழுதி அந்த படத்தை அக்கதையின் தன்மை மாறாமல் சரியான நடிகர்கள், நடிகைகளை தேர்ந்தெடுத்து சரியான பட்ஜெட்டில் எடுத்து தயாரிப்பாளர்களுக்கு வெற்றிப் படமாக அதை அமைத்து கொடுக்கும் பொறுப்பு ஒரு இயக்குநருடையது தான். ஒரு படத்தில் அறிமுகமாகும் இயக்குநர், அடுத்தடுத்து அவரின் கிராப் உயர உயர அவர்களின் சம்பளமும் உயரும். அப்படி தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் 8 இயக்குநர்களின் லிஸ்ட் இதோ..

1.ஷங்கர் :

‘ஜென்டில் மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கி வருபவர் ஷங்கர். இப்போது இவர் இயக்கத்தில் ரெடியாகி வரும் ‘இந்தியன் 2’வில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்கிறார். கமல் அரசியலில் பிஸியாக இருப்பதால், இப்படத்தின் புது ஷெடியூல் ஷூட்டிங்கை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க ப்ளான் போட்டுள்ளார். இயக்குநர் ஷங்கர் ஒரு படத்துக்கு ரூ.50 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

2.ஏ.ஆர்.முருகதாஸ் :

‘தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கி வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய கடைசி படமான ‘தர்பார்’யில் சூப்பர் ஸ்டாரான ரஜினி நடித்திருந்தார். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் அவரது புதிய படத்துக்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக பணியாற்றி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

3.எஸ்.எஸ்.ராஜமௌலி :

‘மாவீரன், நான் ஈ, பாகுபலி 1, 2’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்போது எஸ்.எஸ்.ராஜமௌலி பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்து கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

4.மணிரத்னம் :

‘மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, அலைபாயுதே, ஓ காதல் கண்மணி, செக்கச்சிவந்த வானம்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கி வருபவர் மணிரத்னம். இப்போது மணிரத்னம் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் மணிரத்னம் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

5.கே.எஸ்.ரவிக்குமார் :

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் – ‘உலக நாயகன்’ கமல் ஹாசனை வைத்து ‘தசாவதாரம், படையப்பா, அவ்வை சண்முகி, முத்து’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். விரைவில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் தமிழ் ரீமேக்கை, கமல் ஹாசனை வைத்து இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

6.கே.வி.ஆனந்த் :

சினிமாவில் ஒளிப்பதிவாளராக வலம் வந்த கே.வி.ஆனந்த், இயக்குநராக அவதாரம் எடுத்து ‘கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கி கொண்டிருக்கிறார். இவர் இயக்கிய கடைசி படமான ‘காப்பான்’யில் சூர்யா – மோகன் லால் இணைந்து நடித்திருந்தார்கள். இப்போது கே.வி.ஆனந்த் அவரது புதிய படத்துக்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

7.கொரட்டாலா சிவா :

‘மிர்ச்சி, ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ், பரத் அனே நேனு’ என தொடர்ந்து தெலுங்கில் வெற்றிப் படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் கொரட்டாலா சிவா. இப்போது இவர் இயக்கி வரும் புதிய படமான ‘ஆச்சார்யா’வில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் கொரட்டாலா சிவா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

8.ஹரி :

‘சாமி, கோவில், ஐயா, தாமிரபரணி, வேல், சிங்கம் 1, 2, 3’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கி வரும் பாப்புலர் இயக்குநர் ஹரி. இப்போது ஹரி இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். சமீபத்தில், ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹரி ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

Share.