விக்ரம் படத்தின் ஹிந்தி உரிமம் இத்தனை கோடியா ?

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்,சூர்யா , விஜய் சேதுபதி ,ஃ பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது . உலகம் முழுக்க இந்த படம் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது . பல இடங்களில் இந்த படம் புதிய சாதனை செய்து வருகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூலை நிகழ்த்தி உள்ளது.

இதனிடையே விக்ரம் படத்தின் ஓ.டி.டி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கி இருந்தது . கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .திரையரங்கில் படத்தை பார்க்காத இயலாத சினிமா நட்சத்திரங்கள் ஓ.டி.டியில் படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

இந்திய சினிமாவே விக்ரம் படத்தை வெகுவாக ரசித்தது என்று சொல்லலாம் . இந்நிலையில் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றால் அதை ஹிந்தியில் டப் செய்து யூடியூபில் பதிவிடுவார்கள் அந்த வகையில் விக்ரம் படத்தின் ஹிந்தி உரிமத்தை 32 கோடி ரூபாய்க்கு விற்று உள்ளது படக்குழு .

Share.