ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

ஹிப்ஹாப் தமிழா என்றழைக்கப்படும் ஆதி, இண்டிபெண்டன்ட் ஆல்பம் வெளியிட்டு அதன்மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பின் அதிலிருந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக காலடியெடுத்து வைத்து தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என்று பல பரிமாணங்களை எடுத்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, அஸ்வின் ராம் இயக்கத்தில் “அன்பறிவு” என்ற திரைப்படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நெப்போலியன், விதார்த், காஸ்மிரா, ஊர்வசி, சாய்குமார், சங்கீதா கிரிஸ் மற்றும் தீனா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளார்கள்.

Share.