‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி. இவர் நடிப்பில் ‘அன்பறிவு, சிவகுமாரின் சபதம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘சிவகுமாரின் சபதம்’ இன்று (செப்டம்பர் 30-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை ஆதியே இயக்கியுள்ளார். இதில் ஆதிக்கு ஜோடியாக மாதுரி நடித்துள்ளார். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியே இசையமைத்துள்ள இதற்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், தீபக்.எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளாராம். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.