‘பிக் பாஸ் 4’ : “ஆரியோட என்ன பிரச்சனை?”… மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கேட்ட கமல்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா மற்றும் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஹவுஸ்மேட்ஸிடம் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் “ஆரியோட என்ன பிரச்சனை?” என்று கேட்கிறார். அதற்கு ரியோ ராஜ் “சார் நிறைய இடங்கள்ல நிறைய பேர் அவங்களோட 100% effort-அ போட்டு அதை நல்லாவே சில பேர் பண்ணியிருப்பாங்க. ஆனா, அதை appreciate பண்ணாம, அதுல இருந்து ஏதோ ஒன்ன தேடி கண்டுபிடிச்சு அந்த குறையை மட்டும் சொல்லிட்டிருப்பாரு” என்று சொல்கிறார்.

பின், பாலாஜி முருகதாஸ் “கேள்விக் கேட்டா அதுக்கான direct பதில் வர மாட்டைங்குது. நீ 4-வது வாரம் என்ன பண்ண? 5-வது வாரம் என்ன பண்ண?ன்னு திருப்பித் தான் கேட்கிறாரு” என்று சொல்கிறார். அதன் பிறகு ரம்யா பாண்டியன் “நீங்க baggage பற்றி நிறைய எபிசோடுஸ்ல பேசியிருக்கீங்க. baggage-ஐ இறக்கி வைங்க அப்படின்னு. ஆனா, அவர் எடுத்துட்டு வர்ற விஷயம்லாம் பார்த்தீங்கன்னா, ஆழ்மனசுல அவ்ளோ baggages வைச்சிருக்காரு” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.