மாஃபியா படத்தின் சாட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா ?

அருண் விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் மாஃபியா . இந்த படத்தில் நடிகர் பிரசன்னா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . கார்த்திக் நரேன் இந்த படத்தை இயக்கி இருந்தார் .பிரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை .

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் மாஃபியா 2 படம் பற்றி கார்த்திக் நரேனிடம் ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார் . விரைவில் வரும் என்று சொன்ன கார்த்திக் நரேன் , நடிகர் அருண் விஜய்யிடம் இது பற்றி கேட்டுள்ளார் . ஆனால் நடிகர் அருண் விஜய் தற்போது தனக்கு ஓய்வு தேவைப்படுகிறது அதன் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் மாஃபியா படம் வெளியாவதற்கு முன்பே அதன் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமத்தை விற்றது படக்குழு . அந்த வகையில் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் இரண்டு சேர்த்து இரண்டு கோடி ரூபாய்க்கு விற்று உள்ளது படக்குழு .

Share.