வலிமை படத்தின் சாட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது .நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


.இந்நிலையில் நடிகர் அஜித்தின் வலிமை படம் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது . இந்நிலையில் வலிமை படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஜீ நிறுவனம் 60 கோடிக்கு வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது .

Share.