ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா லோகேஷ் கனகராஜ் ?

நடிகர் கமல் தற்பொழுது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் சார்பாக அவரே தயாரித்துள்ளார் .விஜய் சேதுபதி , ஃபகத் பாசில், நரேன் , காளிதாஸ் ஜெயராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .இந்த படம் வருகின்றன ஜூன் மாதம் 3ம் தேதி வெளியாகிறது . இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி உள்ளார் .இவர் நடிகர் கமலின் தீவிரமான ரசிகர் என்பதை பல மேடைகளில் அவரே கூறியுள்ளார் . விக்ரம் படத்தை ஒரு ரசிகனாக செதுக்கி உள்ளாராம் லோகேஷ் . இந்த நிலையில் விக்ரம் படத்தின் தொடக்கம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகி இருக்கிறது .

நடிகர் கமலிடம் என்ன கதை பண்றதுனு கமல் அவர்களிடமே கேட்டேன் . பின்பு இரண்டு பேரும் இணைந்து பேசி ஒரு லைனில் உறுதி ஆகினோம் . அதன் பிறகு மூன்று மாதம் அந்த லைனில் வேலை செய்தேன் .இரண்டு மணி நேரம் அதை கதையாக சொன்னேன் . இப்படி தான் விக்ரம் படம் உருவானதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார் .

கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் முதலில் முழுக்க முழுக்க அது லோகேஷ் படமாக இருக்கும் என்று சொன்ன லோகேஷ் பிறகு மாஸ்டர் வெளியீட்டிற்கு முன் மாஸ்டர் படம் ஐம்பது சதவீதம் என் படமாகவும் ஐம்பது சதவீதம் விஜய் படமாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் அடுத்து இவர் இயக்கி இருக்கும் விக்ரம் படம் முழுக்க முழுக்க லோகேஷ் படமாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் லோகேஷ் மீது நம்பிக்கை வைத்துள்ளார் .ரசிகர்களின் நம்பிக்கையை லோகேஷ் காப்பாற்றுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

Share.