இந்தியில் நடித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை – மகேஷ் பாபு

நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கிறார் . 1979-வது ஆண்டு நீடா என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் .அதன் பிறகு 1999-வது ஆண்டு வெளியான
ராஜா குமாரூடு என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார் .அதன் பிறகு இவர் பல வெற்றி படங்களை தெலுங்கு சினிமாவிற்கு கொடுத்துள்ளார் .

மகேஷ் பாபு நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் “சர்க்காரு வாரி பாட்டா ” என்கிற படத்தில் நடித்துள்ளார் .
கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார் . இந்த படத்திலிருந்து வெளியான பாடல் காலாவதி பாடல் வைரலானது .இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். பரசுராம் இந்த படத்தை இயக்கி உள்ளார் .மகேஷ் பாபு இந்த படத்தை தயாரித்துள்ளார் .


இந்நிலையில் சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபு இந்தி படங்கள் குறித்து பேசி உள்ளார் .அதில் ” இந்தியில் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன . அவற்றில் நடித்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை ; தெலுங்கு திரை உலகில் எனக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்து போதும் ; தெலுங்கில் இருந்தே உலகப் புகழ் பெற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் .மகேஷ் பாபுவின் இந்த் பேச்சு வைரலாகி வருகிறது .

Share.